காலனை வெல்வோம்
உலக ரோஜா தினம் அனுசரிப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி மேலக்கல் கண்டார் கோட்டை திருச்சி
புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவைக் காட்டவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக தினம் கொண்டாடப்படுகிறது
தற்பொழுது உலகெங்கிலும் அனேக குடும்பங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலை உள்ளது. இந்நோயிலிருந்து முற்றிலும் விடுபட்ட நோயாளிகள் சிலரே. மேலும் பலர் அவதியுறும் இந்நிலையில் புற்றுநோயாளிகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கும் அவர்கள் தனியாக இல்லை அவர்களோடு இந்த சமுதாயம் நெருங்கிய தொடர்புடன் இருக்கிறது என்பதைக் காட்டவும் மனித சமுதாயத்தினர் அனைவரும் முனைய வேண்டும்.
2000 – ஆம் ஆண்டில் மெலிண்டா ரோஸ் என்னும் 12 வயது கனடா நாட்டு சிறுமி புற்றுநோயை எதிர்த்து மிக கடுமையாக போராடினார். அந் நேரத்திலும் உலகெங்கிலும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் அவர்களுடன் கடிதம், கவிதை, கதை என பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மெலிண்டாவின் பாரம்பரியத்தில் நாம் ஒருவரும் இணைய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி இந்நிகழ்வை முன்னெடுக்கிறது. இந்நிகழ்வில் 12 வருடங்களுக்கு முன்பாக புற்றுநோயால் தாக்குண்டு அதனை எதிர்த்து வெற்றிகரமாக மீண்ட சத்யா என்பவர் தனது கணவர் சௌந்தரராஜன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளால் பாராட்டப்பட்டார். தன்னம்பிக்கையின் உருவமான சத்யா அவர்களுக்கு அனைத்து மாணவ மாணவிகளும் அன்பின் சின்னமான ரோஜாவை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழக அரசின் இளம் சமூக சேவகி விருது பெற்ற கலை இளமணி. சுகித்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்பான சமுதாயதாயமாக உருவாகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்கள்
எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளை அரவணைக்கும் மனப்போக்கை பெறுவதற்காக மாணவ மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ரோஜா தினக் கொண்டாட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன் அவர்கள் தலைமை வகித்தார் விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அருணா அவர்கள் செய்திருந்தார்கள்.