சவரனுக்கு ரூ.120/- குறைவு…… ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து சற்று ஆறுதல் அளித்தது.
இந்நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,185-க்கும் சவரன் ரூ.49,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.