Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

30 முறை எவரெஸ்ட் மலை உச்சியை தொட்ட பெண் சாதனையாளர்…..!

0

நேபாளத்தில் வசித்து வருபவர் கமிரித்தா ஷெர்பா . இவர் உலகின் உயரமான மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை 30 முறை ஏறியுள்ளார். 30 முறை ஏறியதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
இது குறித்து நேபாள சுற்றுலா துறை அதிகாரிகள் காலை 7:49 மணிக்கு கமி ரித்தா ஷெர்பா தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். இது அவரது 30வது எவரெஸ்ட் சிகரம் ஏற்றம். இந்த பருவகாலத்தில் அவரது 2 வது ஏற்றமாக உள்ளது. இதற்கு முன் மே 12ம் தேதி இந்த பருவகாலத்தில் ஒரு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

நேபாளின் மாவட்டத்தில் உள்ள தாமே கிராமத்தில் வசித்து வருபவர் இந்த கமிரித்தா ஷெர்பா. இவர் Seven Summit Treks நிறுவனத்தில் மூத்த வழிகாட்டியாக பணிபுரிந்து வருகிறார். 54 வயதான ஷெர்பாவுக்கு மலையேறுவதில் ஆர்வம் அதிகம். தொடர்ந்து இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலை ஏறி வருகிறார்.
உலகின் உயரமான சிகரத்தின் உச்சிக்கு ஒரு குழு மலையேறுபவர்களையும் கமிரித்தா வழி நடத்திச் சென்றார். சுமார் 28 மலையேறுபவர்களைக் கொண்ட மலையேற்றக் குழுவினருடன் காட்மாண்ட்டுவிலிருந்து கமிரித்தா பயணத்தைத் தொடங்கினார். 71 ஆண்டுகால வரலாற்றில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறி சாதனை படைத்தவர் கமிரித்தா ஷெர்பா. 2023ல் சொலுகும்பு மாவட்டத்தில் வசித்து வரும் பசாங் தவா ஷெர்பா 27வது முறையாக எவரெஸ்ட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்