Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் நடத்திய ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் …

0

 

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜெயா சிறப்பு பள்ளி இணைந்து ஆசிரியர் தின விழா பள்ளியின் வளாகத்தில் கொண்டாடியது.
இதில் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்வியியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜமால் முகமது ஜாபர் அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் செயலாளர் அப்துல் ரஹீம் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதல்வர் பரிமளா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்பு குழந்தை ஈடுபட்டு ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஊக்கமளித்தல் குறித்து விவாவாதம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி யின் சிறந்த ஆசிரியராக முதல்வர் பரிமளாவிற்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத் தலைவர் ஜெகதீசன் நன்றியுரை கூறினார். ரோட்டரி சங்கம் திருச்சி நெக்ஸ்ட் ஜென் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசும் குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கேக் வெட்டி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்