Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

திருச்சி தாம்பரம் இடையே முன் பதிவு இல்லாத சிறப்பு ரயில்

0

கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் வெளி ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் பயணிப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

திருச்சியில் இருந்து இன்றிரவு 11 மணியளவில் புறப்படும் மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை காலை 6. 05 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது. முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுக சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி தாம்பரம் இடையே இந்த மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்