கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. இந்நிலையில், நாளை (செப்.1) வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 வரை மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.60 முதல் ரூ.70 வரை குறையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெட்ரோல் விலை ரூ.6, டீசல் விலை ரூ.5 என மத்திய அரசு குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது