Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை… நீதிமன்றம் உத்தரவு!

0

தென்னாப்பிரிக்கா
சிறை தண்டனை பெற்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாக்கோப் ஸூமா தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜாக்கோப் ஸூமா. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், நீதித்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஜாக்கோப் ஸூமாவிற்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவில் வரும் 29-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட 82 வயதான ஜாக்கோப் ஸூமா மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு சட்டப்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தென்ஆப்பிரிக்க உச்சநீதிமன்றத்தில் ஜாக்கோப் ஸூமா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே குற்றவியல் வழக்கில் ஜாக்கோப் ஸூமா சிறை தண்டனை பெற்றுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்