காசாவின் ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தது குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ALL EYES ON RAFAH’ என்ற போஸ்டரை இன்ஸ்டாகிராமில் கடந்த 24 மணிநேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர்.இந்த போஸ்டர் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறது.
விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, நடிகைகள் த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா, நடிகர் துல்கர் சல்மான், இயக்குனர் அட்லீ மற்றும் பல நடிகர்,நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என பலரும் இதனை பகிர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.