Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

பத்தாம் வகுப்பு. அறிவியல் பாடத் தேர்வில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்த தாகவும், மாணவர்கள் தேர்ச்சி குறையக்கூடும் எனவும் ஆசிரி யர்கள் அச்சம் தெரிவித்தனர்

0

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு • நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அறிவியல் பாடத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.07 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில் அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலானவை எதிர்பாராத வினாக்களாக இருந் தன. வழக்கமாக இடம் பெறும் கேள்விகள் 25 சதவீதம் அளவுக்கு கூட இந்த வினாத்தாளில் இல்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிவியல் ஆசிரி யர்கள் கூறியதாவது: ஒவ்வொரு பாடப்பகுதியிலும் முக்கியமான தாக மாணவர்களுக்கு குறித்து கொடுத்த ஒரு கேள்வி கூட வினாத் தாளில் இடம்பெறவில்லை. ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து பகுதிகளிலும் புதிய வடிவிலான வினாக்களே கேட்கப்பட்டிருந் தன.

அதற்கு நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பதிலளிக்க சிரமப்பட்டனர். மெல்ல கற்கும் மாணவர்களை கருத்தில் கொள் ளாமல் இந்த வினாத்தாள் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர் தேர்ச்சி குறைவதுடன் சென்ட்டம் எண்ணிக்கையும் பெருமளவு சரியும்” என்றனர்.

இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்ற பாடங் களை ஒப்பிடுகையில் தொடர்ந்து அறிவியல் வினாத்தாள் மட்டும் கடினமாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. பிற பாடங்களை போல் அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டுமென பலமுறை வலி யுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இது அறிவியல் பயில விரும்பும் மாணவர்களின் விருப்பத்தை சிதைக்கும் செயலாகும் எனவும் கல்வியாளர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

சமூக அறிவியல் பாடத்தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகிறது. மேலும், தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்